Wednesday, October 23, 2019
பலரும் பேரிச்சை என்பது  ஒரு பாலைவன பயிர் என்றே கருதிக்கொண்டிருக்கிறார்கள். அது முழுமையான உண்மை அல்ல. இந்தியாவிலும் பேரிச்சை குறிப்பிட்ட அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.  குறிப்பாக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் ஏராளமான விவசாயிகளால்  பயிரிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் சில விவசாயிகளால் பேரிச்சை பயிரிடப்பட்டு வருகிறது. உரிய முறையில் பேரிச்சையை பயிரிட்டு சாகுபடி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். பேரிச்சைக்கு உலகளவில் இந்தியாதான் மிகப்பெரிய...
நான் ஓவன் எனப்படும் துணிவடிவிலான காகிதங்களின் பயன்பாடு இன்றைக்கு பரவலாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இது வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது என்பதை உணர்ந்த பல்வேறு நாடுகள்,  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கி வருகின்றன. சில நாடுகள் முற்றிலுமாக தடையும் விதித்து விட்டன.  தமிழகத்தில் கூட குறிப்பிட்ட மைக்ரான் அளவு வரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தைகைய காரணங்களால் ...
உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, மொத்த மக்கள் தொகை யில் சுமார் 50 சதவிகித பெண்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவர்களில் 25 சதவிகிதப் பெண்களுக்குத்தான் முறையான வங்கிக் கணக்கு இருகிறது. அதிலும் மிகச் சிலரே வங்கிக் கணக்கை பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலான குடும்பங்களில், நிதி நிர்வாக முடிவுகளை ஆண்களே எடுகிறார்கள். பல பெண்கள் தங்களது பொருளாதாரத் தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டுமென்றால் அக்கம்பக்கத்தினரையே...
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்,  பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய, சொத்து ஜாமீன் கொடுக்க இயலாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் விதமாக, தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் படி தொழில்முனைவோருக்கு 10 சதவீதம் மூலதனம் இருந்தால் போதும். மீதம் 90 சதவீதம் கடனாக அரசால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.5லட்சம் வரை சொத்து ஜாமீன் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. மத்திய மாநில...
பலருக்கும் பூச்செடிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. பூச்செடிகளை மட்டும் விற்பனை செய்வதற்கு சிலர் பூச்செடிகளை வளர்க்கின்றனர். இன்னும் சிலர் பூக்களை மட்டும் விற்பனை செய்வதற்கு பூச்செடிகளை வளர்க்கின்றனர். இது ஒரு நல்ல தொழில் எனலாம்.   கிராமபுறங்களில் அதிக அளவு திறந்தவெளி இடங்கள் இருப்பதால் அம்மக்கள் அதிக பூச்செடிகளை வளர்த்து  பூக்களை விற்கிறார்கள்.  குறைந்த அளவு நிலம் உள்ளவர்கள் கூட பூச்செடிகளை வளர்த்து பூக்களை விற்பனை...
தற்போது எந்த ஒரு வணிக நடவடிக்கையும், உற்பத்தி துறையும் லாஜிஸ்டிக்கை மையமாக வைத்தே செயல்பட்டு வருகிறது. சரக்கு போக்குவரத்து துறையின் புதிய பரிணாம பெயர்தான் லாஜிஸ்டிக்.  இந்த துறையில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சரக்குகளை கையாளும் போது மிக நுட்பமான முறையில் அதிக கவனத்துடன் கையாள வேண்டும்.  அவ்வாறு செய்யும் போதுதான் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முடியும். ஒரு பொருளை தேவையான நேரத்தில் தேவையான நபருக்கு சரியாக கொண்டு சென்று...